Jan 19, 2011

டாஸ்மாக்கும் புத்தக சந்தையும் !!!குடிக்கு அடிமையான குடிகாரன் குடிப்பதற்கு தாமதம் ஆனால் எந்த மனநிலையில் இருப்பானோ அதே மனநிலையில் தான் நேற்று மாலை நான் இருந்தேன் நேரம் ஆக ஆக ஒரு பித்த நிலைக்கு சென்றுவிட்டேன் காரணம் நேற்று சென்னை புத்தக திருவிழாவின் கடைசி நாள் இவ்வருடம் நான்கு தினங்கள் சென்று நிறைய புத்தகம் வாங்கிவிட்டேன் ஆனால் கடைசி நாள் எப்படியாவது சென்று விட வேண்டும் என்று நினைத்திருந்தேன் கடந்த மூன்று தினங்களாக நான் சென்னையில் இல்லை பொங்கல் கொண்டாட ஊருக்கு சென்றிருந்தேன். நேற்று காலை எப்படியாவது இன்று மாலை சென்னை வந்து புத்தக திருவிழாவில் தலை காட்டி சில குறிப்பிட்ட புத்தகங்களை வாங்கிவிட வேண்டும் என்று நினைத்திருந்தேன்.

நான் சென்னை வந்து சேரும்போது ஏழு மணி ஆகியிருந்தது செம்ம டயர்ட். போகலாமா வேண்டாமா என்று யோசித்தேன் ஏனென்றால் அங்கு போய் சேர்வதற்கே இருபது நிமிடம் ஆகிவிடும் புத்தக சந்தை எட்டு முப்பதுக்கு முடிந்து விடும். முடியும் தருவாயில் என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டிருந்தேன் சிறிது நேரம் கழித்து போக வேண்டாம் என்றே முடிவு செய்துவிட்டேன் கனத்த இதயத்துடன். அப்போதுதான்  நண்பன் ஸ்ரீராமிடம் இருந்து போன் வந்தது

"நான் புக் fair ல இருக்கேன் நீங்க வரலையா?"

"இல்ல ஸ்ரீராம் நான் வரல, ரொம்ப லேட் ஆயிடுச்சி இப்போ வர்றது வேஸ்ட்"

"சரி ஓகே"  

/// டொக் ///

போனை வைத்துவிட்டு சிறிது நேரம் அமர்ந்திருந்தேன் நேரம் சரியாக 7.45 pm
இப்போதுதான் நான் அந்த குடிஅடிமை மனநிலைக்கு சென்றேன் என்னாவானாலும் சரி போய் பார்த்துவிட்டு வந்துவிடுவோம் என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டு. சரியாக பத்து மணிக்கு மூடப்படும் டாஸ்மாக்கிற்கு அது மூடிவிடுவதற்குள் விரைந்து செல்வதுபோல படு வேகமாக வண்டியை ஒட்டி எட்டு பத்திற்கு புத்தக சந்தைக்கு சென்றடைந்தேன். அங்குதான் அந்த அற்புதம் நடந்தது. அது என்னவென்று கேட்கிறீர்களா? நாளை சொல்கிறேன் சிறிது நேரம் பொறுத்திருங்கள் :)


[தொடரும்]

அன்புடன்,
பிரபு ராமகிருஷ்ணன்

Jun 19, 2010

நிறுத்தப்படுகிறது

இந்த வலைத்தளத்தில் எழுதுவதை நிறுத்தி கொள்ள போகிறேன் ஏனென்றால் என்னுடைய வருகையையும் இது பதிவு செய்து விடுகிறது ஆகையால் உண்மையில் மக்கள் இதை படிக்கிறார்களா என்று தெரியவில்லை. வேர்ட்பிரஸ் அப்படி இல்லை வாசகர்களின் வருகையை அழகாக பதிவு செய்யும். இனி நான் என் வேர்ட்பிரஸ் வலைத்தளத்தில் தான் எழுதபோகிறேன்.
நன்றி,


பிரபு ராமகிருஷ்ணன்

Jun 17, 2010

பெண் சிங்கம் கொடுத்த அதிர்ச்சி

நேற்று குடும்பத்துடன் திருச்சி சென்றுகொண்டிருக்கும்போது மகிழுந்தில் பாடல்கள் ஒலித்து கொண்டிருந்தன அனைத்தும் தமிழ் பாடல்கள் திடீரென்று எனக்கு பிடித்த உஸ்தாத் நுஸ்ரத் பதே அலி கானின் "அப்ரீன் அப்ரீன்" என்ற பாடலின் ஆரம்ப இசை வந்ததை கேட்டு திடுக்கிட்டேன். எப்படி இந்த சிடீயில் சம்பந்தமே இல்லாமல் இந்த பாட்டு  வருகிறதென்று. பிறகுதான் தெரிந்தது நம் இசையமைப்பாளர் தேவா அந்த ஆரம்ப இசையை அப்படியே கத்தரித்து அவரின் பாடலில் புகுத்தி விட்டார் என்று. ஒரு மாஸ்டர் பீசை கூச்சமே இல்லாமல் திருடுவதற்கு எப்படி தான் மனதுவருகிறதோ இவர்களுக்கு.

ஒரிஜினல் பாடலை இங்கு கேளுங்கள்

ustad nusrat fateh ali khan-afreen afreen

இனிமேல் இங்கு தமிழ்தான்

இதுதான் நான் ஆரம்பித்த முதல் blog பிறகு வேர்ட்பிரஸ்ஸில் மற்றொண்டு ஆரம்பித்தேன் அதை ஆரம்பித்தவுடன் இதில் எழுதுவதை நிறுத்தி விட்டேன் இப்போது இந்த வலைதளத்தை தமிழில் மட்டும் எழுத முடிவு செய்திருக்கிறேன். இனிமேல் இங்கு தமிழ்தான்.

பிரபு ராமகிருஷ்ணன்  

பித்தனின் உளறல்கள்!!! கவிதை [3]

“மதிகெட்டவன் மனதிற்குள்
சிதறிக்கிடக்கும் எண்ணங்கள்
வார்த்தைகளாக உருமாறி
கவிதை என்னும் சட்டையை அணிந்துகொண்டு
தன்னை அலங்கரிதுக்கொல்கின்றன”

- பிரபு ராமகிருஷ்ணன்

குரங்கும் பூமாலையும் – திடீர் கவிதை [2]

“அரசியல்வாதிகள் கையில் தமிழ்,
இலக்கியவாதிகள் கையில் இன்டர்நெட்,
குரங்கு கையில் பூமாலை”

- பிரபு ராமகிருஷ்ணன்

திடீர் கவிதை

“மழையே! நீ என்ன பரத்தையா?
இரவில் மட்டும் வருகிறாய்.
பகலில் வா பத்தினியை போல”

-பிரபு ராமகிருஷ்ணன்-

May 10, 2009

Madhav madhukkar


Madhav madhukkar, originally uploaded by Prabhu Ramakrishnan.

Made this photograph using canon 450D and 50mm 1.8 lens in very low light. later processed the image in preview software[Mac] to get this black and white output.

May 2, 2009

Pelican's@Nalapet bird sanctuary


Pelican, originally uploaded by Prabhu Ramakrishnan.

Nalapet bird sanctuary situated near pulicat lake 120 km drive from chennai. if you want to make good photograph's of pelican this the right place. extremely alluring and natural environment makes this place a paradise for bird watchers and photographers.Prabhu Ramakrishnan

May 1, 2009

The Wine Bottle opener


Wine Bottle opener, originally uploaded by Prabhu Ramakrishnan.

i bought this wine bottle opener at Singapore shop, vadapalani. i was searching for this kinda opener for one full day and finally got it there. it looked very beautiful its a box set with one opener and two other things which used to fit in wine bottle. only once i used this opener i have kept it safely in office:)


Prabhu Ramakrishnan