Jun 19, 2010

நிறுத்தப்படுகிறது

இந்த வலைத்தளத்தில் எழுதுவதை நிறுத்தி கொள்ள போகிறேன் ஏனென்றால் என்னுடைய வருகையையும் இது பதிவு செய்து விடுகிறது ஆகையால் உண்மையில் மக்கள் இதை படிக்கிறார்களா என்று தெரியவில்லை. வேர்ட்பிரஸ் அப்படி இல்லை வாசகர்களின் வருகையை அழகாக பதிவு செய்யும். இனி நான் என் வேர்ட்பிரஸ் வலைத்தளத்தில் தான் எழுதபோகிறேன்.
நன்றி,


பிரபு ராமகிருஷ்ணன்

Jun 17, 2010

பெண் சிங்கம் கொடுத்த அதிர்ச்சி

நேற்று குடும்பத்துடன் திருச்சி சென்றுகொண்டிருக்கும்போது மகிழுந்தில் பாடல்கள் ஒலித்து கொண்டிருந்தன அனைத்தும் தமிழ் பாடல்கள் திடீரென்று எனக்கு பிடித்த உஸ்தாத் நுஸ்ரத் பதே அலி கானின் "அப்ரீன் அப்ரீன்" என்ற பாடலின் ஆரம்ப இசை வந்ததை கேட்டு திடுக்கிட்டேன். எப்படி இந்த சிடீயில் சம்பந்தமே இல்லாமல் இந்த பாட்டு  வருகிறதென்று. பிறகுதான் தெரிந்தது நம் இசையமைப்பாளர் தேவா அந்த ஆரம்ப இசையை அப்படியே கத்தரித்து அவரின் பாடலில் புகுத்தி விட்டார் என்று. ஒரு மாஸ்டர் பீசை கூச்சமே இல்லாமல் திருடுவதற்கு எப்படி தான் மனதுவருகிறதோ இவர்களுக்கு.

ஒரிஜினல் பாடலை இங்கு கேளுங்கள்

ustad nusrat fateh ali khan-afreen afreen

இனிமேல் இங்கு தமிழ்தான்

இதுதான் நான் ஆரம்பித்த முதல் blog பிறகு வேர்ட்பிரஸ்ஸில் மற்றொண்டு ஆரம்பித்தேன் அதை ஆரம்பித்தவுடன் இதில் எழுதுவதை நிறுத்தி விட்டேன் இப்போது இந்த வலைதளத்தை தமிழில் மட்டும் எழுத முடிவு செய்திருக்கிறேன். இனிமேல் இங்கு தமிழ்தான்.

பிரபு ராமகிருஷ்ணன்