Jan 19, 2011

டாஸ்மாக்கும் புத்தக சந்தையும் !!!



குடிக்கு அடிமையான குடிகாரன் குடிப்பதற்கு தாமதம் ஆனால் எந்த மனநிலையில் இருப்பானோ அதே மனநிலையில் தான் நேற்று மாலை நான் இருந்தேன் நேரம் ஆக ஆக ஒரு பித்த நிலைக்கு சென்றுவிட்டேன் காரணம் நேற்று சென்னை புத்தக திருவிழாவின் கடைசி நாள் இவ்வருடம் நான்கு தினங்கள் சென்று நிறைய புத்தகம் வாங்கிவிட்டேன் ஆனால் கடைசி நாள் எப்படியாவது சென்று விட வேண்டும் என்று நினைத்திருந்தேன் கடந்த மூன்று தினங்களாக நான் சென்னையில் இல்லை பொங்கல் கொண்டாட ஊருக்கு சென்றிருந்தேன். நேற்று காலை எப்படியாவது இன்று மாலை சென்னை வந்து புத்தக திருவிழாவில் தலை காட்டி சில குறிப்பிட்ட புத்தகங்களை வாங்கிவிட வேண்டும் என்று நினைத்திருந்தேன்.

நான் சென்னை வந்து சேரும்போது ஏழு மணி ஆகியிருந்தது செம்ம டயர்ட். போகலாமா வேண்டாமா என்று யோசித்தேன் ஏனென்றால் அங்கு போய் சேர்வதற்கே இருபது நிமிடம் ஆகிவிடும் புத்தக சந்தை எட்டு முப்பதுக்கு முடிந்து விடும். முடியும் தருவாயில் என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டிருந்தேன் சிறிது நேரம் கழித்து போக வேண்டாம் என்றே முடிவு செய்துவிட்டேன் கனத்த இதயத்துடன். அப்போதுதான்  நண்பன் ஸ்ரீராமிடம் இருந்து போன் வந்தது

"நான் புக் fair ல இருக்கேன் நீங்க வரலையா?"

"இல்ல ஸ்ரீராம் நான் வரல, ரொம்ப லேட் ஆயிடுச்சி இப்போ வர்றது வேஸ்ட்"

"சரி ஓகே"  

/// டொக் ///

போனை வைத்துவிட்டு சிறிது நேரம் அமர்ந்திருந்தேன் நேரம் சரியாக 7.45 pm
இப்போதுதான் நான் அந்த குடிஅடிமை மனநிலைக்கு சென்றேன் என்னாவானாலும் சரி போய் பார்த்துவிட்டு வந்துவிடுவோம் என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டு. சரியாக பத்து மணிக்கு மூடப்படும் டாஸ்மாக்கிற்கு அது மூடிவிடுவதற்குள் விரைந்து செல்வதுபோல படு வேகமாக வண்டியை ஒட்டி எட்டு பத்திற்கு புத்தக சந்தைக்கு சென்றடைந்தேன். அங்குதான் அந்த அற்புதம் நடந்தது. அது என்னவென்று கேட்கிறீர்களா? நாளை சொல்கிறேன் சிறிது நேரம் பொறுத்திருங்கள் :)


[தொடரும்]

அன்புடன்,
பிரபு ராமகிருஷ்ணன்

1 comment:

Prasanna Ramachandran - PXR said...

நண்பரே எங்க மீதி?